தனுஷுக்கு புதிய சிக்கல்

477

விஐபி அணியான இயக்குனர் வேல்ராஜ், அனிருத், நடிகர் தனுஷ் மீண்டும் இணையும் படம் தங்கமகன். மீண்டும் ரஜினி படத்தின் தலைப்பை வைத்துள்ளதால், படம் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் படம் டிசம்பர் 18ம் தேதி தான் வெளியாகும் என தனுஷ்அறிவித்தது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துவிட்டது. இப்போது பிரச்சனை என்னவென்றால், இதே தேதியில் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படமும் வெளியாகவுள்ளது என்பது தான். சசிகுமார் மற்றும்வரலக்ஷ்மி சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பொதுவாக பாலா படம் என்றாலே கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும், அதை ‘தங்கமகன்’ சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

SHARE