ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளன – ஜோன் கெரி

301

ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். ஆண்டுக்கான சிறந்த ராஜதந்திரிக்கான விருது வழங்கும் நிகழ்வு வொஸிங்டனில் நடைபெற்ற போது அதில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் அமெரிக்காவின் பங்களிப்புடன் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் அமெரிக்காவின் தலைமையினால் இந்த மாற்றங்கள் தனித்து மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடுகளில் நடைபெற்ற மாற்றங்கள் அமெரிக்காவின் ஒத்துழைப்பு இன்றியே இடம்பெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE