யானையின் தாக்குலுக்கு இலக்காகி ஆசிரியர் மற்றும் பாகன் பலி

278
இருவேறு பிரதேசங்களில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.

30 வயது ஆசிரியர் பலி

கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த முப்பது வயதான கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் என்ற ஆசிரியர் ஒருவர், யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாகாடுப் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நைனாகாடு பள்ளக்காடு பகுதியிலுள்ள தனது வயலுக்குச் சென்றபோதே, இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன் மட்டக்களப்பில் யானையின் தாக்குதலால், கணவன் மற்றும் கர்ப்பிணி மனைவி ஆகியோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

பன்சலை யானையின் தாக்குதலில் பாகன் பலி

கொடக்கவெல, மல்வத்த பிரதேசத்தில் நேற்று பன்சலையொன்றைச் சேர்ந்த யானையொன்று திடீரெனத் தாக்கியதில் அதன் பாகனான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர்  உயிரிழந்துள்ளதாக கொடக்கவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடக்கவெல, மல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.வை. பியசேன (வயது 51) எனும் நபரே இவ்வாறு உயிரிழந்திருக்கிறார்.

நேற்றுமுன்தினம் வழக்கம்போல இந்த யானையைக் குளிப்பாட்டிய பின் தனது வீட்டிலிருந்து சுமார் 30மீற்றர் தூரத்தில் அதனை கட்டிப் போட்டிருக்கிறார்.

நேற்றுக் காலை காலை 6.30 அளவில் யானைக்குக் கொடுப்பதற்கு பிஸ்கட் பெட்டியொன்றை எடுத்துக்கொண்டு அவ்விடத்துக்குச் சென்றிருக்கிறார்.

பல வருடகாலமாக இந்த பாகனால் பராமரிக்கப்பட்டு வந்த இந்தப் யானை அன்று ஏதோ காரணத்தால் அமைதி இழந்து காணப்பட்டிருக்கிறது.

அதன் காரணத்தைத் தெரிந்துகொள்ளாமல் அருகில் சென்ற பாகனை தும்பிக்கையால் பற்றி நிலத்தில் அறைந்து கொன்றுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் முன் இதே பிரதேசத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவரும் இந்த யானையின் தாக்குலில் உயிரிழந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

SHARE