தனது தந்தையை கொலை செய்து புதைத்ததாக கூறப்படும் மகன் ஒருவர் கலவான, தேல்கோட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் சகோதரரால் கலவான பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 3ம் திகதி தந்தையைக் கொன்று வீட்டுக்கு பின்னால் புதைத்ததாக சந்தேக நபர் தனது சகோதரரிடம் குறிப்பிட்டுள்ளார்.
குடித்து விட்டு தந்தையுடன் மோதலில் ஈடுபட்டமையினாலே தான் கொலை செய்ததாக சந்தேகநபர் கூறியுள்ளார்.
சந்தேக நபர் குடிபோதையில் இருந்த சந்தர்ப்பத்திலே இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கலவான பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் அறிவித்த பின்னர் கொல்லப்பட்ட தந்தையின் சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.