சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குற்றப் புலனாய்வு திணைக்களம், இதனை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் தாஜூடீனின் தாயாரின் குருதி மாதிரிகள் சம்பந்தப்பட்ட ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சம்பந்தமான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக 31 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
அத்துடன் தாஜூடீன் பயணித்த வாகனத்தின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த இலக்க தடுகட்டின் சிக்கல் நிலைமை சம்பந்தமாக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அறிக்கை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவிருப்பதுடன் அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிய தருமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.