இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கியைடாது என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் துரித கதியில் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடி தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
முன்னுரிமை அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வழக்குத் தொடரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த கைது செய்யப்பட்ட சுமார் 12000 புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் சொற்ப அளவிலான உறுப்பினர்களே இன்னமும் எஞ்சியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.