ஐ.நா தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது

314

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என தபாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டியது எனவும் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்த அவர், தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும், சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய நீதிமன்ற முறைமை அமுல்படுத்தப்பட வேண்டுமென்றே கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்தத்தை நோக்கி மக்கள் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால், தமிழ் மக்கள் தனி மாநிலம் கோர நேரிடும் என அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்

SHARE