பண்டாரவளை கொஸ்லந்த அம்பகொலஹார பிரதேசத்தில் அரை ஏக்கர் நிலத்தில் கஞ்ச பயிரிட்டிருந்த நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொஸ்லந்த காவற்துறையினர் மேற்கொண்ட தேடுதலில் 47 வயதான இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை காவற்துறையினர் தீயிட்டு அழித்துள்ளனர். நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காக 6 கஞ்சா செடிகளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தார்.