
அநுராதரபுரத்தில் கடந்த 24 ம் திகதி கொல்லப்பட்ட வசந்த விக்ரம டி சொயிசா என்ற கராத்தே வசந்தவின் கொலையானது, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவரது மகன் மாலக்க சில்வா ஆகியோருக்கு விடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையென ஒருவர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் நகரில் 50 ம் கடை பிரதேச முதித்தா மாவத்தையில், உள்ள ஜெனராமா இரவு கழியாட்ட விடுதிக்குள், 24ம் திகதி இரவு, உள்நுழைந்த ஆயுதம் தாங்கிய குழு, அந்த கழியாட்ட விடுதியின் உரிமையாளர், வசந்த விக்ரம டி சொயிசாவினை கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை அடுத்து பீதியும் குழப்பமும் அடைந்துள்ள மேர்வின் சில்வா இன்று தனது பழைய அடியாட்களை அழைத்து, தனது வீட்டில் வசந்தவின் கொலை குறித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
எது என்ன நடந்தாலும் மேர்வின் சில்வா குஷியாக இருக்கிறார் என்று அனைவருக்கும் கூறுமாறு கலந்துரையாடலின் பின், தனது அடியாட்களிடம் கூறியுள்ளாதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அடியாட்களும் தற்போது அதனை செய்து வருகின்றனர். ஆனால் காணப்படும் அச்சுறுத்தல் நிலையில் கராத்தே வசந்தவின் இறுதிக் கிரியைக்கு செல்லாதிருக்க மேர்வின் தீர்மானித்துள்ளார்.
பிரபல கெலெத்தேவ கொலை வழக்கில் முக்கிய நபரான எல்ப்ரட் டி சொயிசாவின் மகனான 57 வயதுடைய வசந்த விக்ரம டி சொயிசா தனது தந்தை விடயத்தை எப்போதும் மறைத்து வைத்திருக்க விரும்பியவர் என்று மேர்வின் சில்வா தனது அடியாட்களிடம் கூறியுள்ளார்.
கராத்தே வசந்தவிற்கு, இரவு கழியாட்ட விடுதி அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது மேர்வின் சில்வா ஆவார்.
அதன்படி வசந்த, மேர்வின் சில்வாவிற்கு மாதாந்தம் கப்பம் செலுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜெனராம கழியாட்ட விடுதி முன்னாள் ருவான்வெலிசாய அருகில் இருந்தது. ருவான்வெலிசாய பிக்கு மேர்வின் சில்வாவை அழைத்து இடமாற்றம் செய்துகொள்ளுாறு கேட்டு கொண்டதற்கு இணங்க, கழியாட்ட விடுதி அநுராதபுரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இக்கொலையானது பாதுகாப்பு துறையில் உயர் பதவி வகிக்கும் நபர் ஒருவரின் ஆலோசனையில் பாதுகாப்பு பிரிவுடன் தொடர்புடைய நபர்களால், புரியப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆட்சியில் மேர்வின் சில்வா, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செய்த கொடுமைகளின் விளைவாக இந்த மரணம் வசந்தவிற்கு நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேர்வின் சில்வாவும் அவரது மகனும், வசந்தவின் நெருங்கிய நண்பர்களாவர். இந்த கொலையானது மேர்வின் சில்வாவிற்கும், மாலக்க சில்வாவிற்கும் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை என, அவர்களுக்கு நெருங்கிய ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.