கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி இந்தியாவில் இருக்கும் போதே என்னுடன் தொடர்பு கொண்டு ஆயுத வழியில் சென்ற நான் ஜனநாயக வழிக்கு திரும்ப போகின்றேன் எனக்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என கோரி இருந்தார்.
<<< விடுதலை புலிகள் தான் ஏக பிரதிநிதிகள் என கூறி இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நான் தான், அதனை சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து தலைவர் ஆகியுள்ளார். >>> வீ.ஆனந்தசங்கரி.
திரு. ஆனந்தசங்கரியின் எந்தவொரு கருத்தும் ஏற்புடையதல்ல, என்பதால், வசனத்துக்கு வசனம் விளக்கம் கூறுவதில் பயனில்லை!
திரு. ஆனந்தசங்கரியும், திரு. முரளீதரனும் அயல்அயல் வீட்டுக்காரர்கள் என்பதால் இவர்கள் கூட்டுச் சேர நினைக்கின்றார்கள் என்பது மட்டுமன்றி, ‘இனம் இனத்தோடு’, என்பதை உறுதிப்படுத்துவது போல், ‘இனத் துரோகிகள் ஒன்று சேர நினைக்கின்றார்கள்’, என்றும் கூறலாமோ?
TNA யினரின் அண்மைய சில நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன என்பது உண்மையேயாயினும், இவர் குறிப்பிடுவது போல், மேலும் சில வருடங்களுக்காவது, அவர்களின் மீதான, ‘மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை’, குறைய வாய்ப்பில்லை! வெற்றிக் கனவில் மிதக்க வேண்டாம்!
//யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்த வேளை ஏப்பிரல் மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சங்கரமேனன் TNA பினரை சந்திக்க அழைத்திருந்தார். அப்போது, ‘யுத்தத்தை நிறுத்துங்கள் சந்திக்க வருகின்றோம்’, என இவர்கள் கூறினார்கள்//.
TNA யில் அங்கத்துவம் வகிப்பதனால், கருத்துக் கூறும் உரிமை இவருக்கு இருக்கின்றது! அதற்காக, கூட்டுப் பொறுப்பை மறந்து, அவர்கள் நடவடிக்கை தவறென்றும், இவர் கூறுவதே சரியென்றும், இவரால் சொல்ல முடியாது? பெரும்பான்மையினர் பார்வையில், ‘சரி’, எனக் கருதப்படுமிடத்து, அவர்களின் முடிவு தவறாகாது!
‘இந்தியாதான் போரை நடத்தியது’, என்று திரு. கோத்தபாய ராஜபக்ஷவே கூறியிருக்கும் போது, இவர் புதிதாக, ‘இந்திய அரசாங்கமா யுத்தத்தை நடத்தியது’, என்று புதுக் கேள்வி கேட்கின்றார்?
நோட்டுப் புத்தகமும் கையுமாத் திரியும் இவர், எதையாவது யாருக்காவது எழுதி அனுப்புவதோடு அதை ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தி விட்டுச், ‘சிவனே’, என்று இருப்பதுதான் இவரின் அரசியல்? வேறு விதமாகக் கூறுவதானால், ‘நாரதர் வேலை’! கலகம் விளைவித்துச் சுகம் காணும் பலருள் இவரும் ஒருவர்! அவ்வளவுதான்!
முகத்துக்கு அஞ்சி வேசையாடிய கதையாக, TNA அமைப்பில் இருக்கும் கட்சிகளுள் ஒன்றாக இருந்த காரணத்தால், TULF இனருக்கும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது! அதில் கூட வெல்ல முடியாத இவருக்கு, மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட திரு. முரளீதரனுடன் கூட்டு வைத்து மக்கள் ஆதரவைப் பெறும் நம்பிக்கை எங்கிருந்து வந்தது? இருக்கவல்ல அற்ப சொற்ப மக்கள் ஆதரவையும் இழக்க நேரும், என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி இந்தியாவில் இருக்கும் போதே என்னுடன் தொடர்பு கொண்டு ஆயுத வழியில் சென்ற நான் ஜனநாயக வழிக்கு திரும்ப போகின்றேன் எனக்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என கோரி இருந்தார்.