வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை பொறுப் பேற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும்-

313

 

தமிழ் மக்களின் தலையெழுத்து வன்னி மண்ணில் மாறி இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, கிராம மக்களின் பொருளாதார அபிவிருத்தி போன்றன நடைபெற வேண்டுமெனில்

12122397_534346923400368_8654099991753034472_n

1.வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை பொறுப் பேற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும்.தவறின்

2.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வன்னி மண்ணில் அரசியல் செய்யும் தமிழ் கட்சிகள் அனைத்தும் கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுடன் இணைந்து அபிவிருத்திப் பணிகளினை மேற்கொள்ளவேண்டும்.

உப்புச் சப்பில்லாத எதிர்க் கட்சிப் பதவியினை வைத்து தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது.மாறாக அரசாங்கத்தினூடாக தம்மை வளப்படுத்த மட்டுமே முடியும்.

யுத்தத்தால் அழிவடைந்த கிளிநொச்சியை புலிகளால் 2002-2003 காலப் பகுதியில் புனரமைக்க முடியும் என்றால் முழு வளத்தினையும் கொண்டு ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் 6 வருடங்கள் கடந்த பின்னரும் முடியாமல் போனது?

எதிர்ப்பு அரசியல் மூலம் தமிழ் மக்களுக்கு இன்றுவரை கிடைத்த நன்மைதான் என்ன?
எதிர்ப்பு அரசியலால் தமிழ் மக்கள் பெற்றவைகள் அதிகமா? இழந்தவைகள் அதிகமா?
ஒவ்வொருவரும் ஒருநிமிடம் சிந்தித்து முடிவெடுங்கள்.

SHARE