பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

367

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

12195923_190049277999554_7122958240870740335_n

தந்தானானே தாரேனானா தானா ஏய்
தந்தானானே தாரனானா தானா….

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்….
கரும்புலி இதயம் இரும்பென எழுதும்
கவிதைகள் பொய் ஆகும்
அது இரும்பினில்லை அரும்பிய
முல்லை என்பதே மெய் ஆகும்
ஆகாயத்தை நூலால் அளக்க…

சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே
யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள்
சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும்
வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர்
அவர் படுக்கும் பாயில் வளர்க்கும்
நாயை கிடக்க விடுபவர்
ஆகாயத்தை நூலால் அளக்க….

காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை
யாருக்கு இங்கே இது தெரியும்
கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும்
இலக்கை நோக்கி நகரும் போது
கணக்கை பார்ப்பவர்
அவர் வெடிக்கும் போதும் அனுப்பும்
தோழர் உறவை காப்பர்.

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்………..

 

 

SHARE