வெள்ளைவான் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என மேர்வின் நம்பிக்கை

284

வெள்ளை வான் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரைண நடத்தப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் கொலைகளின் பின்னயியில் யார் செயற்பட்டார்கள் என்பது பற்றிய விபரங்களை தாம் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை நடத்தி உரிய முறையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது  அதிகாரிகளின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை வான் கடத்தல்கள், கொலைகள், நிதி மோசடிகள், குற்றச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தமக்கு தெரிந்த அனைத்து விடயங்கள் பற்றிய தகவல்ளையும் முறைப்பாடாக எழுதி குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, யார் குற்றவாளிகள் என்பது பற்றி தொடர்ந்தும் பேசுவதற்கு தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் தமக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டால் விசாரணைகளில் பங்கேற்று விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், சட்டத்தை மதித்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE