சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அசமந்த போக்கினால் விசாரணைகள் மந்த கதியில் – ஜே.வி.பி

315

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அசமந்த போக்கினால் விசாரணைகள் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் உள்ளிட்ட 25 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இது மிகவும் ஓர் பாரதூரமான நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அனைத்து விசாரணகளையும் பூர்த்தி செய்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக சட்ட மா அதிபர்திணைக்களத்திடம் ஆலோசனை கோரியுள்ள நிலையில், சட்ட மா அதிபர் திணைக்களம் உரிய ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவு, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் பாரிய நிதி மோசடிகள், அதிகார தூஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியன உரிய முறையில் முறைப்பாடுகளை விசாரணை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மந்த கதியினால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட கடந்த அரசாங்கத்தை அனைவரும் இணைந்து தோற்கடித்ததாகவும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு ஊழல் மோசடி விசாரணைகளை தடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் விளக்கம் அளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

SHARE