இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்க நேரிடலாம் இந்தியா எச்சரிக்கை

352

இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்க நேரிடலாம் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கடற்பரப்பிற்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என மத்திய அமைச்சர் பொன்.இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக மாநில முன்னாள் முதல் கலைஞர் கருணாநிதியின் குடும்ப திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டால், அதே வழிமுறையை இந்தியாவும் பின்பற்ற நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற் பரப்பில் அத்து மீறும் மீனவர்களுக்கு எதிராக அரபாதம் விதிக்கப்பட்டால், நிச்சயம் இந்தியாவும் இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE