மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பொறுப்புணர்ச்சியற்ற செயல் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது அண்மையில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் குறித்து பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்ட போது பின்நகர்ந்த அப்பாவி மாணவர்கள் மீது சீருடையணிந்த காவல்துறை அதிகாரிகள் பெட்டன் பொல்லுகளினால் தாக்கதல் நடத்தியமை பொறுப்பற்ற செயலாகும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தொலைக்காட்சியில் தாக்குதல் சம்பவத்தை பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் ஆயுதங்களுடன் போராட்டத்தில் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாட்டில் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்த மக்களுக்கு உரிமையிருக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதல்களுக்கு யார் கட்டளையிட்டார்கள் என்பது பற்றி ஆராயப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் தொழில் வாய்ப்பு இன்றி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.