பிள்ளையானை மேலும் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

276

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை நடாத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 11ம் திகதி பிள்ளையானை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர்.
2005ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி இன்று வரையில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

SHARE