மனைவியை மீட்டுத் தாருங்கள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன் அமர்ந்திருக்கும் கணவன்

303
மத்தியகிழக்கில் தொழில் புரியும் தனது மனைவியை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரும் படி கூறி  நபரொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான வாயிலின் முன் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை தெஹிஹத்தகண்டியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன் அமர்ந்துள்ளார்.

தனக்கு தெரியாமல் வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றின் ஊடாக தனது மனைவி வெளிநாட்டுக்கு பயணித்துள்ளதாகவும், தற்போது அழைப்பை மேற்கொண்டு தன்னை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர வழிசெய்யும்படி கூறுவதாகவும் அந்நபர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE