தனது பிள்ளையை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த பெண் கைது

261
ஆறு வயதுடைய தனது பிள்ளையை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவர் கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த ரயிலில் குறித்த பெண்ணினால் தனது பிள்ளையை  ரயிலில்  தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது அவ்விடத்தில் இருந்த கண்டி பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பிள்ளையை காப்பாற்றியுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அந்த பெண் தப்பி சென்றுள்ள நிலையில் கண்டி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

37வயதுடைய குறித்த பெண்ணுக்கு மேலும் இரண்டு பிள்ளைகள் இருப்பதனால் கடைசி பிள்ளையை இவ்வாறு ரயிலில்  தள்ளி கொலை செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளை மற்றும் கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கண்டி பொலிஸார் தெரவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்

SHARE