வடபகுதி பொதுமக்களுக்கு சொந்தமான தங்கம் எங்கே இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தங்கங்களை கைப்பற்றி, அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக கடந்த அரசாங்கம் கூறியிருந்தது.
கடந்த அரசாங்கம் தங்க ஆபரணங்களை உண்மையான உரிமையாளர்களிடம் கையளித்திருந்தாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர்களின் பெயர் விபரங்களுடன் தங்கத்தை கடந்த அரசாங்கம் களஞ்சியப்படுத்தியிருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பெருந்தொகை தங்கம் மீள கையளிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தங்கம் எங்கு இருக்கிறது எனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.