மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை

285

மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி கொழும்பில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகாமையில் போராட்டம் நடத்திய போது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பினை இதுவரையில் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கம் காலத்தை கடத்த விசாரணைக் குழுக்களை நிறுவியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பில் சில ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதலுக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

SHARE