அரசாங்கம் தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளது – ஜே.வி.பி

596

புதிய அரசாங்கம் தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் டீல்காரர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துள்ள காரணத்தினால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ கைது செய்யப்படுவது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியாது எனவும், அவ்வாறு தெரிந்திருந்தால் பெசில் கைது செய்யப்பட்டிருக்கப்பட மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணைகளை நடத்தி பூர்த்தி செய்துள்ள போதிலும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் காவல்துறை மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களங்களில் கிடப்பில் போடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே அவன்ட் கார்ட் சம்பவம் குறித்த விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதனால் இந்த சமப்வம் குறித்து அரசாங்கத்திற்கு நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE