முன்னணி பொறியியலாளரும், தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியருமான மஹாலிங்கம் நேற்று காலை யாழ்ப்பாண வைத்தியசாலையில் காலமானார்.
எஸ்.மஹாலிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறிமுறைமை பொறியியற் பீடத்தின் பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் மஹாலிங்கம் லண்டன் பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
1970களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக அவர் கடமையாற்றத் தொடங்கினார்.
யாழ்ப்பாணம் அளவெட்டியில் இன்றைய தினம் அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறற்றன.
“தனது திறமையால் தனக்கு கிடைக்க இருந்த பெரும் அன்பளிப்பை ஜெற் இன்ஜினாக வாங்கி தனது பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய மாமேதை” :-
பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற் பீட ஸ்தாபக விரிவுரையாளர்களில் ஒருவராக பேராசிரியர் எஸ்.மஹாலிங்கம் கடமையாற்றியுள்ளார்.
1950ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புதிததாக பொறியிற் பீடம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பேராசிரியர் மஹாலிங்கம் கனிஸ்ட விரிவுரையாளர்களில் ஒருவராக கடமையாற்றியுள்ளார்.
கனிஸ்ட நிலை விரிவுரையாளர் என்ற ரீதியில் தமக்கு அந்தக் காலத்தில் அதிகளவு வசதிகள் இருக்கவில்லை எனவும் கடமையாற்றுவது சவால் மிக்கது எனவும் பேராசிரியா மஹாலிங்கம் தெரிவித்திருந்தார்.
2000மாம் ஆண்டு வெளியிடப்பட்ட பொறியியற்பீட பொன்விழாக் கொண்டாட்டங்களுக்கான நினைவு மலரில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரின் ஒர் பகுதியாகக் காணப்பட்ட மலேயாவைச் சேர்ந்த மஹாலிங்கம், உயர்கல்வியைத் தொடரும் நோக்கில் 1946ம் ஆண்டு இலங்கைக்கு வருகின்றார்.
மஹாலிங்கம் சிலோன் டெக்னிகல் கொலேஜ் (இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி) இல் இணைந்து கொண்டு பொறியற்; துறையில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளார்.
இந்த கற்கை நெறி நான்கு ஆண்டு காலப்பகுதியைக்கொண்டதாகும்.
அப்போதைய மலேயாவில் பல்கலைக்கழகம் இல்லாத காரணத்தினால் அங்கு வாழும் இலங்கையர்கள், இலங்கையில் பட்டக் கற்கை நெறிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இலங்கையில் பொறியில் பீடத்தில் பட்டக் கற்கைநெறியை பூர்த்தி செய்து, 1950ம் ஆண்டு ஜூலை மாதம் பேராதனை பல்கலைக்கழகத்தின் கனிஸ்ட விரிவுரையாளர்களில் ஒருவராக பேராசிரியர் மஹாலிங்கம் இணைந்து கொண்டார்.
ஓய்வு பெற்ற பேராசிரியர் அமரர் மஹாலிங்கம் அனைத்து இன மாணவர்களின் மத்தியிலும் பிரபல்யமும், நன்மதிப்பும் கொண்டவராக காணப்படுகின்றார்.
அவரது மறைவிற்கு அவரிடம் கல்வி பயின்ற பல மாணவர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
பாடத்தைப் போன்றே வாழ்க்கையையும் கற்றுக்கொடுத்த ஓர் கருணையான ஆசானாக மரியாதைக்குரிய புத்திஜீவியாக, வளவாளராக, கல்விச் சேவகனாக, கல்வித்துறைக்கு அர்ப்பணிப்புச் செய்த பொறியிலாளராக அமரர் மஹாலிங்கம் போற்றப்படுகின்றார்.