தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து இளம் நடிகர்களுக்கும் அஜித்துடன்நடிக்க வேண்டும் என காத்திருக்கின்றனர். ஆனால், பிரபல மலையாள நடிகர் ஒருவர் அஜித்துடன் நடிக்க மறுத்துவிட்டார்.
அவர் வேறு யாரும் இல்லை, வேதாளம் படத்தின் இயக்குனர் சிவாவின் தம்பி பாலா தான். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.
வேதாளம் படத்தில் நடிக்க கால்ஷிட் கேட்டப்போது மலையாள சினிமாவின் கமிட் ஆகியிருந்ததால், அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது. இவர் ஏற்கனவே அஜித்தின் தம்பியாக வீரம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.