காவல்துறையினரை விமர்சனம் செய்யும் சட்டம் ஒழுங்கு அமைச்சர்

295

காவல்துறையினரின் நடவடிக்கையை சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன விமர்சனம் செய்துள்ளார்.
பெயர் போட்டுக் கொள்ளும் நோக்கில் அல்லது பிரபல்யம் அடையும் நோக்கில் அவன்ட் கார்ட் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது இதேபோன்று காவல்துறையினர் மிலேனியம் சிட்டி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மிதக்கும் ஆயுதக் கப்பலை நடாத்திச் செல்வதில் எந்த தவறையும் தாம் காணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் சரியான புரிதல் இன்மையே பிரதான பிரச்சினையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான மிதக்கும் ஆயுதக் கப்பல்கள் இயங்கி வந்ததாகவும்இ இதில் பிழைகள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE