நாட்டைக் காப்பாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இழிவுபடுத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதங்களில் நேற்று பங்கேற்று பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் நாடு தொடர்பில் பொறுப்பு காணப்படுகின்றது.
நாட்டை பாதுகாத்த மஹிந்த ராஜபக்சவை தொடர்ச்சியாக தாக்கக் கூடாது.
அனைவருக்கும் கௌரமான முறையில் மரணிக்க இடமளிக்க வேண்டும்.
கௌதம புத்தரின் உடன்பிறப்புக்கள் போன்று சிலர் நாடாளுமன்றில் கருத்து வெளியிடுகின்றனர்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு என்று ஒன்று உள்ளது.
பிரதி சபாநாயகர் அவர்களே, சபாநாயகருடன் பேசி நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரின் சுய கௌரவத்தையும் பாதுகாக்க திட்டமொன்றை வகுக்கும்பொறுப்பு உங்களுக்கு உண்டு.
நான் அமைச்சராக கடமையாற்றிய காலங்களில் ஐந்து சதமேனும் திருடவில்லை என்பதனை மிகுந்த பொறுப்புடன் கூறுகின்றேன் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.