நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றில் மன்னிப்பு கோரினார்

276

நிதிக்குற்றவியல் விசரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு 2 இன் பொறுப்பதிகாரியே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்ற மரபுகளை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஸ பெல்பிட்ட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யாது நேரடியாக உயர் நீதிமன்றில் ஆஜர் படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு நேரடியாக உயர் நீதிமன்றில் ஆஜர் செய்தமைக்காக மன்னிப்பு கோருவதாக கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம், காவல்துறை உத்தியோகத்தர் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த மன்னிப்பினை நீதவான் ஏற்றுக்கொண்டுள்ளார்.

SHARE