கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ரூபா 60 கோடி பெறுமதியான ‘சில்’ துணிகளை வழங்கியமை தொடர்பாக லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகிய இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜரான பொலிஸ் நிதிமோசடி பிரிவின் பொறுப்பதிகாகரி எஸ்.எஸ்.எம். சாதிக், குறித்த சந்தேகநபர்களை கைது செய்யாததன் மூலம் தான் நீதிமன்றத்தை அவமதித்திருந்தால் மன்னிக்குமாறு தெரிவித்திருந்தார்.
அவரை மன்னித்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
நீதிமன்றத்தின் அழைப்பின் பேரில் அங்கு சமூகமளித்த பொலிஸ் நிதிமோசடி பிரிவின் பொறுப்பதிகாரி சாதிக், குறித்த இருவரையும் கடந்த ஒக்டோபர் 17ம் திகதி கைதுசெய்வதற்கான அனுமதியை அரச வழக்கறிஞர் வழங்கியிருந்ததாகவும், ஆனால் அன்றைய தினம், தனக்கு அத்தனகல்ல நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டி இருந்ததால் அவர்கள் இருவருக்கும் எதிராக அடுத்தநாள் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.