உள்ளுராட்சி சபைகளின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பானது- வவுனியா மாவட்டம்:

303

கௌரவ பைசர் முஸ்தபா அவர்கள்,

உள்ளுராட்சி,மாகாண சபைகள் அமைச்சர்,

உள்ளுராட்சி அமைச்சு,

இல 330, டொக்டர்.கொல்வின் ஆர்.சில்வா மாவத்தை

(யூனியன் பிளேஸ்)

கொழும்பு 02

 

 

உள்ளுராட்சி சபைகளின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பானது- வவுனியா மாவட்டம்

 

மேற்படி விடயம் தொடர்பாக வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் பின்வரும் விடயங்களை தங்களின் மேலான கரிசனைக்காக தயவுடன்; முன்வைக்கின்றேன்.

முறைகேடாக நடைபெற்ற எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் குழுவொன்றை நியமித்தமைக்காக நல்லாட்சி அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்

 

 மேற்படி எல்லை மீள்நிர்ணயம் கடந்த அரசாங்கத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளுடனோ, பொதுமக்கள் பிரதிநிதிகளுடனோ கலந்துரையாடப்படாது மாறாக அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சிப்பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

 பொதுமக்கள் சார்பாக முன்னைய வடக்கு ஆளுனரின் ஆணையாளரும், தெற்கு பிரதேச செயலகத்தின் செயலாளரும் குழுவில் அங்கம் வகித்துள்ளனர்.

 நான்கு பிரதேச சபைகளையும், ஒரு நகரசபையையும் கொண்ட வவுனியா மாவட்டத்தில் சில சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தில் பிரச்சனைகள் எழுந்துள்ளன.

 

செட்டிகுளம் பிரதேச சபை

 

 11 உறுப்பினர்களை கொண்ட செட்டிகுளத்தில் 74 வீதம் தமிழ் மக்களும் , 26 வீதம் முஸ்லீம் மக்களும் வாழ்ந்துவரும்நிலையில் 11 வட்டாரங்களில் 05 வட்டாரங்கள் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய கிராமங்களை ஒருங்கிணைத்தும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாழும் கிராமங்கள்; ஏனைய வட்டாரங்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூம் 74 வீதமானவர்களிலிருந்து 06 பேரும், 26 வீதமானவர்களிலிருந்து 05 பேரும் தெரிவாககூடிய நிலமையுள்ளது.

 அத்துடன்

வவுனியா வடக்கு பிரதேச சபை

 

 14 உறுப்பினர்களை கொண்ட வவுனியா வடக்கில் பட்டிக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் 1980 களில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்து மீண்டும் தற்போது மீள்குடியேற்றப்பட்ட நிலையில் அவர்களுக்காக தனிப் பெரும்பான்மையினரை உள்ளடக்கியதாக 04 வட்டாரங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை

 

 ஏற்கனவே 11 வட்டாரங்களாகவிருந்த நகரசபையானது தற்போது 10 வட்டாரங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன் 02 கலப்பு வட்டாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 வட்டாரங்களின் இலக்கங்களும் மாற்றப்பட்டுள்ளன.

 

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள எல்லை மீள்நிர்ணய குழுவிற்கு மேற்படி பரிந்துரைகளை தயவுடன் சமர்ப்பிக்கின்றேன்.

Dr.பத்மநாதன் சத்தியலிங்கம்,

சுகாதார அமைச்சர்,

வடக்கு மாகாணம்.

 

 

பிரதிகள்:-

கௌரவ இரா சம்பந்தன் அவர்கள்,பா.ம.உ,தலைவர்,த.தே.கூ, எதிர்கட்சி தலைவர்

கௌரவ மாவை சேனாதிராஜா, பா.ம.உ, தலைவர்,இ.த.அ.க

 

SHARE