பத்து இந்திய மீனவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு

273

பத்த இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கைக் கடற்படையினர் குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அண்மையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் பத்துபேருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே குறித்த மீனவர்கள், இலங்கைக் கடற்படைக்கு சொந்தமான அதிவேக கண்காணிப்பு படகுகள் மீது மோதி சேதப்படுத்தியதாக கடற்படையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE