அவன்ட் கார்ட் சம்பவம் காரணமாக அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதம்:

281

அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் அமைச்சரவையில் அவன்ட் கார்ட் சம்பவம் குறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன அண்மையில் பாராளுமன்றில் விளக்கம் அளித்திருந்தார்.

காவல்துறையினர் தங்களது நற்பெயரைத் தேடிக்கொள்ள இவ்வாறு அவன்ட் கார்ட் மிதக்கும் கப்பல் விவகார விசாரணைகளை பூதாகாரமாக்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும், இந்த நிலைப்பாட்டை அமைச்சர்களான ராஜித, சம்பிக்க ஆகியோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் பங்கேற்றிருந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் கடும்வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஓர் கட்டத்தில் அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேற நேரிடும் என இரண்டு அமைச்சர்களும் கடும் எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பற்றி பேசுவதற்கு தனியான அமைச்சரவைக் கூட்டமொன்றை நடாத்த ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

SHARE