எந்தவொரு மாகாணசபைக்கும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வேண்டாம் – சரத்பொன்சேகா:-

287
எந்தவொரு மாகாணசபைக்கும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபைக்கு மட்டுமன்றி நாட்டின் எந்தவொரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படுவதனை எமது கட்சி எதிர்க்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரு மாநிலத்தின் அளவையேனும் கொண்டிராத இலங்கையில் அதிகாரம் பகிரப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்கப்படக்கூடிய பொறிமுறைமை ஒன்றை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு விடயம் தொடர்பிலும் முழ அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்படக் கூடாது எனவும், அனைத்து விடயங்களினதும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் காணப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
SHARE