நாராயணன் மீதான தாக்குதலுக்கு ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்கள் கண்டனம்

287
மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணனின் மீது காலணி தாக்குதலை நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இலங்கையில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு நாராயணனின் ஆலோசனையே காரணமாக இருந்தது என்று குற்றம் சுமத்தி அண்மையில்,

சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து இலங்கையரான எம்.பிரபாகரன் என்பவர் அவர் மீது காலணி தாக்குதலை நடத்தினார்.

எனினும் இந்த சம்பவத்தை தாம் கண்டிப்பதாக தமிழகத்தின் அரசியல் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

மே 17 இயக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட்ட பல ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகள் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளன.

இது ஜனநாயக ரீதியான செயல் அல்ல என்று அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

SHARE