2016ல் இலங்கை இந்தியாவிற்கு இடையில் முக்கிய உடன்படிக்கை கைச்சாத்து

263

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக முக்கியமான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப் படவுள்ளது.
பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பிலான ஒத்துழைப்பு குறித்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வர்த்தக நடவடிக்கைகள் மட்டுமன்றி முதலீட்த்துறை தொடர்பிலும் இந்த உடன்படிக்கையின் ஊடாக கவனம்செலுத்தப்பட உள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எசல வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிகளவான விமானங்கள் பயணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE