பழையவாடி பிரதான வீதி புளியங்குளத்திலிருந்து 5கி.மீ தூரம் வரை குன்றும்
குழியுமாக காணப்படுகின்றது.இவ் வீதியானது மழைக்காலத்தில் சிறிய வாகனத்தில்
இருந்து பெரிய வாகனம் வரை செல்ல முடியாத அளவுக்கு குன்றும் குழியுமாக
காணப்படுவதால் இவ் வீதி வழியாக மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் இடையூரை
சந்தித்து வருகின்றனர். இவ் வீதியினை புனர்நிர்மானம் செய்து தரும்படி பல
தடவைகள் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரச திணைக்களத்தினாலோ
நிறுவனத்தினாலோ இவ் வீதியினை புனர் நிர்மானம் செய்யாத நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளது. இதனை சம்மந்த்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இவ் வீதியினை
புனர்நிர்மானம் செய்து தரும்படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
கு.கோபிகா