யாழ்.நல்லூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடாநாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவர் உட்பட 10 இளைஞர்கள் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் மேலும் தகவல் தருகையில்,
யாழ்.நகர் பகுதியை அண்மித்ததாக உள்ள இடங்களில் சிலர் இலட்சக்கணக்கான பணத்தினை பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த பகுதியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்றைய தினம் நல்லூர் பகுதியில் சூதாட்டம் நடைபெறும் வீட்டை, யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயதிலக்க உத்தரவுக்கமைய முற்றுகையிட்டதுடன் அங்கிருந்த பிரபல வர்த்தகர் உட்பட 10 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபா பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்தார்.