அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் நாளை அடையாள உண்ணாவிரதம்

295
சிறையில் கண்ணீருடன் தங்கள் வாழக்கையை கழித்துக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் சிறைக்குள்ளும் வெளியிலும் வலுவடைந்து வருகின்றன.

இந்தநிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் நாளை காலை 8 மணி தொடக்கம் மாலைவரை அடையாள உண்ணாவிரதம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் மனிதாபிமானம் உள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் 12 மணி தொடக்கம் 2 மணிவரை தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை ஒத்திவைத்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வுள்ளதாகவும் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE