ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் உருவாகி திரைக்கு வர தயாராக உள்ள படம் இஞ்சி இடுப்பழகி.
இந்த படத்தில் ஆர்யா ஒரு ஸ்லிம்மான பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால் இவருக்கு அவ்வாறு நடக்காமல் போக அதனால் அதிர்ச்சியடைகிறார் ஆர்யா. இதனால் அழகான பெண்களை நினைத்து ஒரு பாடல் வருகிறது.
அந்த பாடல் காட்சிக்காக ஆர்யாவுடன் முன்பு நடித்த கதாநாயகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமன்னா, காஜல், ஹன்சிகா என அனைவரும் சரி என கூறியுள்ளனர்.
ஆர்யா நயன்தாராவிற்கு அழைப்பு விடுக்க நயன்தாரா மட்டும் சாரி நோ என சொல்லிவிட்டாராம்