மாலைதீவில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்ட நீக்கத்துடன், அடிப்படை உரிமைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
கடந்த 4ம் திகதி 30 நாட்களுக்கு அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆயுதங்களை மீட்பதற்கு இவ்வாறு அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் சென்ற படகு வெடித்த சம்பவம் குறித்த விசாரணைகளும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நட்பு நாடுகள், சர்வதேச அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையை மதித்து அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவசரகாலச் சட்டத்தை தளர்த்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.