முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பிழையென்று சுட்டிகாட்டும் சுமந்திரன் எம்.பி தான் போகும் அரசியல் பாதை சரியானதா? என்பதைப் பார்க்கவேண்டும்.

323

 

முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பிழையென்று சுட்டிகாட்டும் சுமந்திரன் எம்.பி தான் போகும் அரசியல் பாதை சரியானதா? என்பதைப் பார்க்கவேண்டும்.
கடந்த சில வாரங்களாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில உறுப்பினர்கள் வடமாகாணசபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களை அவருடைய அரசியல் போக்குச் சரியில்லையென்றும், கட்சியின் கொள்கைகளை மீறிச் செயற்படுகின்றார் என்றும் குறிப்பாகச் சுமந்திரன் அவர்களால் சுற்றிக் காட்டப்பட்டுள்ளது. இவ்விடயமானது தமிழ் மக்கள் தரப்பில் பெரும் சச்சையை பிறப்பித்துள்ளதோடு தமிழ் மக்களுடைய அரசியல் வரலாற்றில் ஒரு பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.

maxresdefault
முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடைய கருத்துக்கள் ஆனது வடமாகாணசபையின் ஆரம்ப அமர்வின் போது காரசாரமாக இராது ஒரு வருடங்களின் பின்னர் காத்திரமான முடிவுகளையும் அரசியல் சொற்பதங்களையும் மைத்திரி அரசுக்கு எதிராக தமிழ் மக்களின் நலன் கருதி கூறிவருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவர் பற்றிய குற்றச்சாட்டுக்கள் என்பது தமிழரசுக் கட்சி இவரை வடமாகாணசபையின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கும் போதே பல்வேறு சர்ச்சைகள் தோன்றியிருந்தன. இவர் சிங்களப் பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்தவர் என்றும், அரசாங்கத்துக்கு ஆதரவாகவே செயற்படுகின்றார் என்றும் பல அரசியல் ஆய்வாளர்களாலும் கூறப்பட்டது.
இருப்பினும் தற்பொழுது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் விடயங்கள் அரசாங்கத்துக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்துவதன் காரணமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மேல்மட்டத் தலைவர்களுக்கு இரணில் விக்கிரமசிங்காவிடம் இருந்து பெரும் அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக சுமந்திரன் சம்பந்தன் மாவை போன்றோர் அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்புவது எமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர் செயற்படாது வடமாகாணசபையில் உள்ள ஒரு சில அமைச்சர்களும், ஒரு சில உறுப்பினர்களையும் தனது கைக்குள் வைத்துக் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் மட்டுமல்லாது கஜந்திரகுமார் பொன்னம்பலம், ஐங்கரநேசன், டெனீஸ்வரன், குருகுலராஜா போன்றோரையும் தனது பக்கம் இழுத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்ததுக்கு அப்பால் அவருடைய செயற்பாடுகள் அமைந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டி இருக்கும் அதே நேரம், சுமந்திரன் வெளிநாட்டுக்குச் சென்று வெளிப்படையாக கருத்தை முதலமைச்சருக்கு எதிரான கருத்தை கூறியிருப்பது என்பது அக்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவது மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கு மத்தியில் பிரிவினை தோற்றுவிப்பதுடன் வடமாகாணசபையின் செயற்பாடு வேறு, கூட்டமைப்பின் செயற்பாடு வேறு என கோடிட்டுக் காட்டப்படுவதாகவே அமையப்பெறுகின்றது. கட்சிக்குள் ஆயிரம் முறண்பாடு இருப்பினும் அதனை சீர்செய்யவேண்டியது கட்சியின் மேல்மட்டத் தலைவர்களின் பொறுப்பாகும்.

Mahinda-Sampanthan-Sumanthiran
அதனை வெளிச்சம் போட்டுக் காட்டி முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கட்சியில் இருந்து ஓரம் கட்ட நினைப்பதென்பதும், அவருக்கு எதிரான செயற்பாட்டில் சுமந்திரன் அவர்கள் களம் இறக்கியிருப்பதும் வன்மையாக கட்டிக்கத்தக்க ஒரு விடயமாகும். இதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டும் காணாதது என்பது போல் இருப்பதென்பது தாமும் எதிர்ப்பலைகளை விக்கினேஸ்வரனுக்கு தெரிவிப்பதாகவே கருத்தில் கொள்ளப்படும்.
சுமந்திரன் அவர்களுடைய செயற்பாடுகளைப் பார்க்கின்ற பொழுது முஸ்லிம் சமூதாயத்துக்குப் பிறந்தவர் போல் அவருடைய பேச்சுக்கள் இடம்பெற்றிருக்கின்றது.
மக்கள் ஆணைபெற்றுத் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தேன் என்று கூறும் சுமந்திரன் அவர்கள் தான் மோஷடி மூலம் வந்தேன் என்பதை தெரிவிக்க மறந்துவிட்டார். படித்த பண்டிதர் கூழ்பானையில் விழுந்த கதையாய் சுமந்தரன் அவர்களுடைய அரசியல் பயணம் அமைந்திருக்கின்றது. பாராளுமன்றத்தில் அனுபவமுடைய ஆங்கிலம் தெரிந்தவர்களை வெளிவிவகார நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பியிருக்க முடியும்.
சுமந்திரன் அவர்களுக்கு முக்கிய பிரச்சனை என்னவென்றால் தமிழ் மக்களுடைய போராட்டத்தின் வலி என்னவென்பது தெரியாது. கொழும்பிலிருந்து சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த சுமந்திரனை அரசியலில் அமர்த்தி அவருக்குப் பொன்னாடை போர்த்தியதன் மூலம் அதற்குப் பிராச்சியத்தமாக ஏனைய அரசியல் வாதிகளை மட்டம் தட்டி அவர்களைப் புறம் தள்ளி அவர்களுடைய பதவிகளையும் தட்டிப் பறித்து நானே ராஜா நானே மத்திரி என்று ஆகவேண்டும் என்பதற்காக இவர் தனது வங்கரோதத்து அரசியலைச் செய்து வருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டத்தையும், அவர்களுடைய தியாகத்தையும் மதிக்கத் தெரியாத எந்தவொரு அரசியல் வாதியும் தமிழ்த் தாய்க்குப் பிறந்திருக்கமாட்டான் என்பதே பொருள்.
குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பேசவேண்டிய சுமந்திரனும், சம்பந்தனும் அதே சமயத்தில் வெளிநாடு சென்றிருந்தமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் சுமந்திரன் அவர்களுக்கு தமிழ் மக்களால் எதிர்ப்பு அலைகள் தோற்றுவிக்கப்பட்டு தகாத வார்த்தைப் பிரயோகங்களும் உச்சரிக்கப்பட்டுள்ளது. தகாதா வார்த்தைப் பிரயோகங்கள் என்பது அநாகரிகமற்ற செயற்பாடாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் உடைய ஆதரவாளர்கள், விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சுமந்திரனைத் தாக்கிப் பேசியதென்பது தவறில்லை. இலங்கையில் கைதிகளின் விடுதலைதொடர்பில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்க அந்தப் பேச்சுவார்த்தைகளை திசை திருப்புவதற்காக அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட ஒரு கோமாளி தான் சுமந்திரன்.
சுமந்திரன் கூறிய கருத்தைப் போன்று நுPசுடுகுஇ Pடுழுவுஇ வுநுடுழுஇ கட்சிகளிலிருந்து யாராவது விக்கினேஸ்வரனைப் பற்றிக் கூறியிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவர்களைத் துரோகி என்ற பட்டம் இந்தளவில் சூட்டியிருப்பார்கள். ஆனால் இன்று தமிழரசுக் கட்சி சார்ந்த ஒருவர் விக்கினேஸ்வரனை அவதூராக வெளிநாடுகளிலும் உள்ளநாடுகளிலும் குற்றஞ்சாட்டியிருப்பது தன்னைத் தட்டிக் கேட்க யாருமில்லை என்ற தைரியம் தான் சம்பந்தனுக்கு துதிபாடும் சுமந்திரன், சுமந்திரனுக்கு துதிபாடும் சம்பந்தன் என்பது போல் தான் தமிழரசுக் கட்சியினுடைய தற்போதைய நடைமுறைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளுடைய போராட்டத்தையும், அவர்களுடைய தியாகத்தையும் சுமந்திரனோ, சம்பந்தனோ மதிப்பதில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதிகள் என்று தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் ஏற்றுக் கொண்ட சம்பந்தன் இன்று அவர்கள் ஏக பிரதிநிதிகள் இல்லை என்று விமர்சிப்பதும், நான் அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருப்பதும் அவர் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க எத்தனிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படி செயற்பட்டுச் செல்வதையே சம்பந்தனோ, சுமந்திரனோ விரும்புகின்றார்கள்.

01-01
இப்படியாக இருக்கின்ற இவர்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளில் ஒன்றான வுநுடுழு அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை தனது பொக்கற்றுக்குள் போட்டுக் கொண்டு என்ன சொன்னாலும் தலையாட்ட வேண்டும் என்ற நிபந்தனையும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
செல்வம் அடைக்கலநாதனைப் பொறுத்தவரையில் தனது பதவியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கின்றாரே தவிர அவர் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கடந்த காலங்களில் அறிவித்திருந்தார் ஆனால் அவர் அறிவித்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவருடைய பேச்சே இன்று செல்லாக் காசாக மாறியுள்ளது. கேட்டால் அரசியலில் இதெல்லாம் சகயம் என்று சொல்லிக் கொள்வார்கள்.
ஆயுதப்போராட்டத்தில் இருந்து வந்த அவருக்கு அதன் வலி தெரியும், அந்த வலி தெரிந்தாலும் அவரை இலகுவில் வெளியே போகவிடாது அவரைத் தமிழரசுக் கட்சியை இறுகப்பற்றிக் கொண்டிருக்க அவருக்குக் கொடுத்த பதவி தான் பிரதி அவைத் தலைவர் பதவி இனி அவர் சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு செல்ல வேண்டியது தான் எல்லா வற்றிலும் நிதானமாக செயற்படுகின்ற தமிழரசுக் கட்சில் பராளுமன்றத்தின் பிரதி அவைத்தலைவராக வருகின்ற ஒருவர் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற ஒருவராக நியமித்திருக்க வேண்டும். இதிலிருந்தே இவர்களுடைய சூழ்ச்சி என்னவென்பது புலப்படுகின்றது. தலையாட்டும் அரசியல் செய்பவர்களேயே சம்பந்தனுக்கும், அவருடன் கூட இருப்பவர்களுக்கும் பிடித்ததொன்று ஏனென்ற கேள்வி கேட்கக் கூடாது.
அதனையும் மீறிக் கேள்வி கேட்டால் அவரை ஓரம் கட்டுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுவார்களே தவிர கட்சி ஒற்றுமையை வலுப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. வடமாகாண சபையையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் வௌ;வேறாக பிரித்துக் காட்டுவதில் சுமந்திரனுக்கு என்ன லாபம் இருக்கின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. அரசாங்கத்தின் உடைய நிலைப்பாடுகள் இப்படித்தான் இருக்கின்றது என்று தெரிந்தும். அரசாங்கம் கூறுவதற்கு எல்லாம் பச்சோந்தி மாதிரி செயற்படுவதென்பது எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான செயற்பாடுகளில் சுமந்திரன் அவர்கள் தீவிரமாகச் செயற்படுகின்றார் என்று வடமாகாணசபை அமைச்சரிகளிடம் உறுப்பினர்களிடம் வினாவியபோது, வடமாகாணசபையினால் சுமந்திரனுக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கின்றார்கள். ‘வானத்தால் போன சனியனை ஏணிவைத்து இறக்கியதாகவே’ சுமந்திரனின் கருத்து.
முதலமைச்சர் விவகாரத்தில் தமிழரசுக் கட்சி கையாளும் முறையானது ஏற்றுக் கொள்ளமுடியாததொன்று கட்சிக்குள் விசாரணைகள் நடத்தப்படுவதென்பது வழமையானதொன்று அதனைப் பகிரங்கப்படுத்தித்தான் செய்யவேண்டும் என்றல்ல. இது போன்றே அனந்தி சசிதரன், இளைஞர் அணித் தலைவர் சிவகரன் போன்றோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக தமிழரசுக் கட்சி கூறியிருந்தது. அப்பொழுது மௌனம் கார்த்து வந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இன்று அவருக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கின்ற பொழுது அதனுடைய வலியை அவர் புரிந்திருக்கின்றார். இருந்தும் அவருடைய அரசியல் செயற்பாடுகள் மிக நிதானமாகவே சென்று கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அவரைத் தாக்குகின்ற பொழுது சில சந்தர்ப்பங்களில் அவர் மனஉழைச்சளுக்கு உள்ளாகின்ற நிலை ஏற்படலாம்.
இதனால் அவர் தனது முதலமைச்சர் பதவியைக் கூட இராஜினமாக செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அவ்வாறு நடைபெற்றாலும் பெரிதாக தமிழரசுக் கட்சி அலட்டிக் கொள்ளப் போவதில்லை. எதிர்க் கட்சிப் பதவி வேண்டாம் என்று கூறிக்கொண்டிருந்த தமிழத் தேசியக் கூட்டமைப்பு திடீரென எதிர்க் கட்சிப் பதவிக்கு ஆசைப்பட்டது ஏன்? இங்கே நடந்த பிரச்சனைகள் தான் என்ன? எதிர்க்கட்சிப் பதவி ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டது? என்றெல்லாம் பார்க்கின்ற பொழுது இதன் பின்னணிகள் நீண்டதூரத்தில் இருக்கின்றது.
முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று கூறுகின்றார்கள். அப்படியாக இருந்தால் சுமந்திரன் அவர்களுக்கு அரசியல் அறிவு இருக்கின்றதா? முதலமைச்சர் முட்டால் என்றால் அதைவிட முட்டால் தான் சுமந்திரன்.
ஆனால் இருவரும் ஒரே துறையிலிருந்து வந்தவர்கள். ஒரு சிறிய வித்தியாசம் தான் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஒரு நீதியரசராக இருந்தவர். அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அன்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் என்ன கூறினாரோ அதுவே இன்று நடக்கின்றது. சட்டமா அதிபருடைய அனுமதி கிடைக்கின்ற பொழுதே அரசியல் கைதிகள் விடுதலை பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது எனக் கூறியிருந்தார். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. 07ம் திகதி கைதிகளை விடுதலை செய்வோம் என்று கூறிய நிலையில் இன்று நடந்ததென்ன? 30 பேரையாவது விடுதலை செய்கின்றோம் என்று கூறியிருந்தார்கள் அதுவும் நடைபெறவில்லை. இங்கேதான் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நிற்கின்றார். வடமாகாணசபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று பிரித்துக் கையாளுவதை தமிழ் மக்களாகிய நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
அது அரசாங்கத்துக்கு மிகவும் வலுச் சேர்ப்பதாக அமைந்துவிடும். அரசியல் வாதிகளினுடைய கருத்து என்பது ஒருவரே வீழ்த்தி இன்னொருவர் மேலே வருவதாகவே அமையப்பெறும். அதற்காக தமிழ்த் தரப்புக்கள் மானங்கெட்ட அரசியல் செய்யக் கூடாது தன்மானத் தமிழனாய் வாழ்ந்து காட்டியவர் தான்;
தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் இன்று அவருடைய பெயரைக் கேட்டாலே உலகமே நடுங்குகின்றது. சிதைந்து கிடந்த தமிழினத்தையும், தமிழ் மக்களுடைய போராட்டத்தையும் சர்வதேசமட்டத்துக்கு கொண்டு சென்றது என்ற பெருமை பிரபாகரனையே சாரும்.
இதற்கிடையில் இன்னுமொரு பெரிய அணுகுண்டாக சுமந்திரன் அவர்கள் முஸ்லீம்களை வெளியேற்றியதற்கு அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இது தடியைக் கொடுத்து அடிவாங்கும் ஒரு செயற்பாடாகவே அமையப்பெறுகின்றது. ஒரு அரசியல் வாதிக்கு இடம், பொருள், ஏவல் என்பது முக்கியம். வாதத்திறமையினால் குற்றங்களை மூடிமறைத்து குற்றவாளியை நிரபராதி என்று வெளியேற்றும் தொழிலைச் செய்து வந்த சுமந்திரனுக்கு தனது வாய்த்திறமையால் எதையும் கையாளமுடியும் என்று நினைத்து தெருநாய்கள் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். ஊடகங்கள் கேட்டால் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்கின்றார். நேரடி விவாதத்துக்கு ஊடகங்கள் தயாராகத்தான் இருக்கின்றது.
பொது இடங்களில் தமிழர்களுடைய தன்மானத்தை விற்பவர்களுடன் என்ன பேச்சு என்று இந்த ஊடகங்களும் கண்னோக்கிப் பார்க்கவேண்டியுள்ளது. கட்சிக்குள் சரிபிழை இருப்பது வழமை முதலமைச்சராக இருக்கும் ஒருவரை இப்படி அப்பட்டமாக குற்றச்சாட்டுவது என்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அளவுக்கு சுமந்திரனுடைய அரசியல் போக்கு செல்லுமாக இருந்தால் நீண்டகாலம் அவருடைய அரசியல் பயணம் தொடரமாட்டாது என்பதே இதனுடைய உண்மைத் தன்மையாகும். இப்படி நடந்த அரசியல் வாதிகளுக்கு கடந்த காலங்களில் நடந்தது என்ன என்பதும் அவருக்கு நன்கு தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் இவரிடம் கேள்விகளைக் கேட்டால் இது எங்களுடைய தனிப்பட்டக் கருத்து என்று கூறி ஏனைய அரசியல் வாதிகளை மட்டம் தட்டுவது, அவர்கள் மீது குறை கூறுவது பழக்கமாகிவிட்டது.
தொடர்ந்தும் வரலாற்றுத் துரோகத்தை செய்வதன் ஊடாக தமிழ் மக்களுடைய சாபத்துக்கு ஆளாவதோடு உண்மை கண்டறியப்பட்டு அதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமே தவிர சுமந்திரன் அவர்கள் தன்னிச்சையாகக் கருத்துக்களைக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், வடமாகாண சபையையும் பிரித்தாலும் நோக்கத்தைக் கைவிட வேண்டும். படித்தவர்கள் கட்சியில் தேவைதான் அதற்காக சோரம் போகும் அரசியலை மேற்கொண்டால் அதனுடைய விளைவுதான் என்ன? சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
-இரணியன்-

SHARE