அரசியல் கைதிகள் பிணையில் செல்ல அனுமதி – பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகள் மீண்டும் சிறை

372

 

அரசியல் கைதிகள் பிணையில் செல்ல அனுமதி – பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகள் மீண்டும் சிறை

தமிழ் அரசியல் கைதிகள் 28 பேர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக இன்று காலை இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2ம் இணைப்பு

முதற்கட்டமாக 28 பேருக்கு பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படிருந்த சந்தேகநபர்களில் முதற்கட்டமாக 28 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமனறத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு 10 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் என்ற  அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்திளார் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பு அல்லது வவுனியா பொலிஸ் நிலையங்களில் அவர் கைச்சாத்திட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு கட்டமாக 63 பேரை விடுதலை செய்வதாக தீர்மானிக்கப்பட்டு இன்று காலை 31 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது சட்டமபா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைக்கவில்லை என அரச சட்டத்தரணிகள் தெரிவித்ததை அடுத்து இந்த மாதம் 24ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகள் பிணையில் செல்ல அனுமதி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவது தடவையாக நீதிமன்றில் குறித்த கைதிகள் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா பத்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணை அடிப்படையில் கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 31 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதுடன், இவர்களில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 26 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனையவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன் இந்தக் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாம் இணைப்பு-

முதற்கட்டமாக 31 பேருக்கு பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் முதற்கட்டமாக 31 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்படபோதே அவர்களுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் என்ற  அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் கொழும்பு அல்லது வவுனியா பொலிஸ் நிலையங்களில் அவர் கைச்சாத்திட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும்  ஜனவரி மாதம் 27ஆம் திகதி அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரிவிட்டுள்ளதாக எமது செய்திளார் தெரிவித்தார்.

இரண்டு கட்டமாக 63 பேரை விடுதலை செய்வதாக தீர்மானிக்கப்பட்டு இன்று காலை 31 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைக்கவில்லை என அரச சட்டத்தரணிகள் தெரிவித்ததை அடுத்து இந்த மாதம் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த சிறைக் கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர்கள் இன்று பிற்பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இதன்போதே 31 சிறைக் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டது.

பிணை வழங்கப்பட்ட போதிலும், அவர்களை பொறுப்பேற்க யாரும் வருகைத் தராத காரணத்தினால் குறித்த சந்தேகநபர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

முன்னர் வந்த செய்தி   –  நல்லாட்சி அரசாங்கத்தின் 2வது ஏமாற்று நாடகம்! பிணை வழங்கப்படவில்லை! – உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஆஸி.நாடாளுமன்றில் உரை

SHARE