மொனராகலை மதுல்ல – கஹட்டகஸ்பிட்டிய குளத்தின், அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தின், மொனராகலை மதுல்ல – கஹட்டகஸ்பிட்டிய குளத்தின், அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.
11.11.2015 அன்று இரவு குளத்தினுடைய அணைக்கட்டின் 15 மீற்றர் முதல் 20 மீற்றர் வரையான பகுதி உடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கஹட்டகஸ்பிட்டிய குளத்தை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் உள்ள வீடுகள் பல நீரில் மூழ்கியுள்ளதுடன் சுமார் 20 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவத்துள்ளது.
குளத்தின் அணைக்கட்டின் உடைந்து விழுந்துள்ளதால் பிரதேசத்தில் உள்ள பயிர் நிலங்கள் பலவும் சேதமடைந்துள்ளன.
அணைக்கட்டை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.