சிறைகளில் பல ஆண்டு காலங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் வடமாகாணசபை, சமூக அமைப்புக்கள் இணைந்து ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்திருந்தது. சிறைக்கைதிகள் விடுதலை என்பது ஏமாற்றத்தினைக் கொடுப்பதன் காரணமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் ஹர்த்தாலுக்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அதன் பெறுபேறாக இன்று 13.11.2015 காலை தொடக்கம் மாலை 5.00 மணிவரை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பதனைப் படங்களில் காணலாம்.
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்படும் கர்த்தாலுக்கு இணையாக இன்றைய தினம் பேருந்து போக்குவரத்து மற்றும் முச்சக்கர வண்டிகள் கூட நிறுத்தப்பட்ட நிலையில் யாழ்.குடாநாடு முழுமையாக முடக்கப்பட்டு கர்த்தால் மேற்கொள்ளப்படுகின்றது.