பிணை வழங்கப்பட்ட 24 தமிழ் கைதிகள் விடுதலையாகிச் சென்றனர்

338

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் பிணை வழங்கப்பட்ட 24 தமிழ் கைதிகள் விடுதலையாகிச் சென்றுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான 31 கைதிகளுக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிணை வழங்கியிருந்தார்.

தலா பத்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் மூலம் குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் பிணை வழங்கப்பட்ட நாளில் எவரும் விடுதலையாகிச் செல்லவில்லை.

அதன் பின்னர் இதுவரையில் 24 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

SHARE