தேசிய சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: சஜித்

310
தேசிய சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் சம்பவம் உள்ளிட்ட தேசிய சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியனவற்றை துஸ்பிரயோகம் செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

அவன்ட் கார்ட் உள்ளிட்ட தேசிய சொத்து மோசடிகள் துஸ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்களை பாதுகாக்க அரசாங்கம் தயாரில்லை.

தேர்தலுக்கு முன்னதாக அவன்ட் கார்ட் தொடர்பில் கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்பட்டது. அந்த நிலைப்பாடு தளர்த்திக்கொள்ளப்படாது.

இந்த ஊழல் மோசடிகளை வழிநடத்திய அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நபர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும்.

அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வகிப்பது மக்களின் ஆணையினாலாகும்.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியது அவசியமானது.

அமைச்சுப் பதவிகள் நிரந்தரமற்றது. மக்கள் எம்மை நிராகரித்தால் இந்தப் பதவியை விட்டு நாம் செல்ல வேண்டும். எனவே நல்லாட்சிக் கொள்கைகள் கோட்பாடுகளை அமுல்படுத்த வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் ஊழல் மோசடிகள் இல்லதொழிக்கப்பட வேண்டுமென்றே விரும்புகின்றனர் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

லுனுகம்விஹர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE