காதலியை மணக்கிறார் ராபின் உத்தப்பா

345
இந்திய கிரிக்கெட் அணி வீரரான ராபின் உத்தப்பா, தனது காதலியான சீட்டல் கவுதமை திருமணம் செய்யவுள்ளார்.கடந்த 2006ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானவர் ராபின் உத்தப்பா, தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது காதலியான சீட்டல் கவுதமை திருமணம் செய்யவுள்ளார், நேற்று இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதற்கான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ள உத்தப்பா, காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மேலும் தனது வாழ்நாளின் எஞ்சிய காலத்தை அழகான பெண்ணுடன் செலவிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE