எதிர்காலத்தில் பல ஹர்த்தால் போராட்டங்கள் இடம்பெறும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நிபந்தனையின்றி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் வரையில் போராட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்த போதிலும், அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் 32 கைதிகள் பிணையில் விடுதலை செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் நீதிமன்ற ரீதியானது எனவும், அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றையே தாம் விரும்பி நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து எதிர்வரும் 16ம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி வட மாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளதாகவும் அந்த உறுதிமொழி குறித்த தீர்மானம் வரும் வரையில் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நடத்தப்பட்ட ஹர்த்தால் போராட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.