‘அரசியல் கைதிகள் ஜனாதிபதி அவர்களால் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் – மாவை சேனாதிராஜா

உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் ஒதுக்கிடு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக இன்று 15-11-2015 தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலொன்று வவூனியாவில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் ஜநா மனித உரிமை பேரவையிலே உங்களுடைய அரசாங்கம் பயங்கர வாத தடுப்பு சட்டத்தை நீக்கும் என வாக்குறுதி அளித்திருந்தீர்கள் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பை உருவாக்கினீர்கள் ஆனால் இப்பொழுது பயங்கரவாத தடைச்சட்டத்தை பாவித்து அரசியல் கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். என சம்பந்தன் கூறியிருந்ததாக தெரிவித்தார்.
ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியில் கைதிகள் விடுதலை செய்யப்படாமையால் அரசியல் கைதிகள் நம்பிக்கையிழந்து மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள். அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறி வருகின்ற படியால் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. ஆகவே கைதிகள் ஜனாதிபதி அவர்களால் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.
ஜனாதிபதி வார்த்தையில் எமக்கு ஐயம் ஏற்பட்டுள்ளதால் 17-11-2015 தமிழ் தேசிய கூட்டமைபின் உறுப்பினர்கள் ஒன்று பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நாங்கள் தீர்மானம் எடுப்போம் என தெரிவித்தார்.
நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன்இ பா.சத்தியலிங்கம்இ செல்வம் அடைக்கலநாதன்இ சிவசக்தி ஆனந்தன்இ முன்னாள் பிரதி நகரபிதா சந்திர குலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.’
|