கடந்த இரு நாட்களாகப் பெய்த கடும் மழையால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களில் 3 ஆயிரத்து 248 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

374

 

கடந்த இரு நாட்களாகப் பெய்த கடும் மழையால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களில் 3 ஆயிரத்து 248 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

2015111505 image_handle (2) image_handle (3) image_handle (4) image_handle (5)

அத்துடன் ஒருவர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளார். வங்காளவிரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் கரையோர, தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 2 ஆயிரத்து 228 குடும்பங்களும், கிளிநொச்சியில் 811 குடும்பங்களும், முல்லைத்தீவில் 209 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன. இடம்பெயர்ந்த குடும்பங்கள் பொது இடங்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகள் வழங்க 3 மாவட்டங்களின் அரச அதிபர்களும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதேசமயம் நேற்றுமுன்தினம் கிளிநொச்சி வட்டக்கச்சியில் மேய்ச்சலுக்காக மாட்டைக் கொண்டு சென்ற சி.யோகலிங்கம் (வயது 37) என்பவர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பல குளங்கள் நிரம்பி வான் பாய்வதாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடக்கம் மழை பெய்வதாலும் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. அத்துடன் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, பல பகுதிகளில் குழாய்க் கிணறுகள் பலவும் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

SHARE