நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் 16.11.2015 அன்று காலை 11 மணியளவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது கழுகு ஒன்று மரத்தில் இருந்த குளவி கூட்டை கலைத்ததினால் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களின் மீது இவ்வாறு தாக்கியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான 15 பேரில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் ஏனைய 10 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளவி தாக்குதலுக்கு இழக்கானவர்களில் 13 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.